மே 30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!
மாத இறுதியில் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.
கடந்த 5ம் தேதி மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தன.
இதன்படி வரும் புதன் மற்றும் வியாழன்கிழமைகளில் வங்கிப் பணிகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்களுடன் தனியார் மற்றும் பன்னாட்டு வங்கி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்