மே முதல் வாரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் டிக்கெட்!
மே முதல் வாரத்தில்,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மூலம் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
திருமலையில் இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜூ தேவஸ்தான பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஆதார் கார்டு மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசலு, இத்திட்டத்திற்காக திருப்பதியிலும் திருமலையிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு அதிகாலை 500 டிக்கெட் வரை சோதனை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.