மேற்கு வங்காளத்தில் பாஜக உறுப்பினர் தூக்கு!

Default Image

 மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியின் எம்.பி.யான அபிசேக் பானர்ஜி, புருலியாவை எதிர்க்கட்சிகள் இல்லாத மாவட்டம் ஆக்குவேன் என சபதம் மேற்கொண்டார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 30ம்தேதி திரிலோசன் மஹதோ என்ற பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.  இதன் பின்னணி பற்றி தெரிவதற்கு முன் மற்றொரு பாரதீய ஜனதா தொண்டர் ஒருவர் டவர் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இவர் புருலியாவின் பலராம்பூர் நகரில் தபா கிராம பகுதியை சேர்ந்த 32 வயது துலால் குமார் என்பது தெரிய வந்துள்ளது.  நேற்றிரவில் இருந்து காணாமல் போன அவர் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்டு உள்ளார்.  இந்த படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என பாரதீய ஜனதா கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

இருப்பினும் இதனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.  இதைபற்றி அக்கட்சியை சேர்ந்த எம்.பி. தெரீக் ஓ. பிரையன் கூறும்பொழுது, இந்த கொடுஞ்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.  அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்.

  எனவே  விசாரணையில் உண்மை கண்டறியப்படும் என கூறியுள்ளார்.குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபற்றி தொடர்ந்து  சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்