மேற்குவங்க மாநிலம்:விஷ்வ பாரதி பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில்.!! பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..!!
இந்தியாவும், வங்கதேசமும், வேறு வேறு நாடுகளாக இருந்தாலும், அவற்றின் பரஸ்பர எண்ணங்கள் ஒரே மாதிரியானவை என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரால், மேற்குவங்க மாநிலம் சாந்திநிகேதனில் நிறுவப்பட்டிருக்கும் விஷ்வ பாரதி பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேந்தர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விழாவிற்காக வந்தபோது, சில மாணவர்கள் தங்களுக்கு குடிநீர் வசதி இல்லை என சைகை மூலம் கூறினர் என்று தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்திற்கு, பல்கலைகழகத்தின் வேந்தர் என்ற முறையில், மன்னிப்புக்கோருவதாக பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சாந்தி நிகேதனில் அமைக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் பவனை, பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்