மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்துச் செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளனர்.மேகேதாட்டு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
dinasuvadu.com
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…