மேகாலயா, நாகாலாந்து மாநிலத்தில் இன்று தொடங்கியது வாக்குப்பதிவு…!!
மேகாலயா, நாகாலாந்து மாநிலத்தில் உள்ள தலா 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மேகாலயா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க சுமார் 18.44 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த வாக்குபதிவானது இன்று மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும் மார்ச் 3ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதனையொட்டி ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.