மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தி, பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தால், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்பப் பெறவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மத்திய நீர்வள ஆணையம், இத்திட்டம் குறித்த தமிழகத்தின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், வரைவு திட்டத்தை தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
dinasuvadu.com
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…