அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்கான சர்ச்சை நீண்டு கொண்டே செல்கின்றது.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்தவிவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து அமைப்பும்,இந்து அமைப்புகளும்,பாஜகாவும் தீவிரமாக உள்ளது. மேலும் உலக அளவில் இந்துக்கள் தான் அதிக சகிப்புத்தன்மை உடையவர்கள். அவர்களின் சகிப்பு தன்மையை எக்காரணத்தை கொண்டும் சோதிக்க கூடாது என பா.ஜக தலைவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஒருவரான உமாபாரதி ராமர் கோவில் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அதில் அயோத்தியில் நிலவி வருவது நிலப்பிரச்னை, மத நம்பிக்கைகள் தொடர்பான பிரச்னைகள் மட்டும் அல்ல.
அது ராமர் பிறந்த இடம் தான் அயோத்தி.ராமருக்கு அங்கு கோயில் கட்டுவது தான் சரியான முடிவாகும்.மேலும் மெக்காவில் கோயிலும் வாடிகனில் மசூதியும் எப்படி இருக்க முடியாதோ அது போல அயோத்தியில் வேறு வழி பாட்டு தலங்களும் அமைய முடியாது.இந்த விவகாரத்தில் அயோத்தியில் மசூதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இந்துக்களின் சகிப்பு தன்மையை சோதிக்க வேண்டாம் என்று காட்டமாக கூறினார்.
DINASUVADU