மூழ்கடிக்கும் வெள்ளத்தில் இறங்கி மக்களை மீட்ட ஐஏஎஸ் அதிகாரி!சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

Default Image

 கடந்த 2 நாட்களாக அசாம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கிய மக்களை மார்பளவு தண்ணீரில் நீந்திச் சென்று ஐஏஎஸ் அதிகாரி மீட்டது பாராட்டைப் பெற்றுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுராவில் பருவமழை தீவிரமடைந்து, கடந்த 48 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த 3 மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் கிழக்கு, மேற்குப் பகுதி மாவட்டங்கள், தவுபால், காக்சிங் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளநிவாரணப் பணிகளைக் கவனிக்க திலீப் சிங் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கமான ஐஏஎஸ் அதிகாரிகள் காரைவிட்டு இறங்காமல், களத்தில் கால் நனையாமல் மீட்புப்பணிகளை மேற்பார்வையிட்டு செல்வதைப் பார்த்திருக்கிறோம். சிலர் படகுகளில் சென்று மீட்புப்பணிகளைப் பார்வையிடுவதை பார்த்திருக்கிறோம்.

ஆனால், இந்த ஐஏஎஸ் அதிகாரி திலீப் சிங் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தார். தலைநகர் இம்பால்நகரில் வெள்ளம் பாதித்த பகுதியை பார்வையிடச் சென்ற திலீப் சிங், மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மீட்டுப்பபடையினரை எதிர்பார்க்காமல், மார்பளவு வெள்ள நீரில் இறங்கி தண்ணீர் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களை மீட்டார்.

சில மணிநேரங்கள் வெள்ள நீரில் இருந்து தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பிவிட்டு தனது அடுத்த கட்ட பணியை தலீப் சிங் தொடர்ந்தார்.

மார்பளவு வெள்ளநீரில் ஐஏஎஸ் அதிகாரி திலீப் சிங் இறங்கி மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

 

சமூக ஊடகத்தில் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதே அந்த மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் என்றால் நம்ப முடிகிறதா. ஐஏஎஸ் அதிகாரி திலீப் சிங் மீட்புப்பணிகளைச் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டு, இதுபோன்ற அதிகாரிகள்தான் தேவை. வெள்ளம் பாதிக்கப்பட்டபகுதிகளில் அரசு அதிகாரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் மீட்புப்பணிகளிலும், உதவிகளையும் செய்யுங்கள் என ட்விட்டரில் முதல்வர் பைரன் சிங் கேட்டுக்கொண்டார்.

ட்விட்டரில் ஐஏஎஸ் அதிகாரி திலீப் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்ட அடுத்த சில மணிநேரங்களில் திலீப் சிங்குக்கு பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பாராட்டுக்கள் குவிந்தன. திலீப் சிங்கை நெட்டிசன்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். இதுபோன்ற அதிகாரிகள்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவை. அடுத்தும் வரும் இளம் அதிகாரிகளுக்கு திலீப்சிங் போன்றோர் ஊக்கமாக இருப்பார்கள்.

நெதர்லாந்து பிரதமர் தான் கொட்டிவிட்ட காபியை தானே சுத்தம் செய்து தனது எளிமையை வெளிப்படுத்தினார். அதைக்காட்டிலும் திலீப்சிங் செய்த செயல்தான் சிறப்பானதாகும் என நெட்சன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்