மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புதிய திட்டம்.! புதிய சலுகை.! அரசு அறிவிப்பு..!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று கேரள அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் ஒருபகுதியாக படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதிகளை அமைத்துக்கொடுக்க இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து தகவல்கள் தெரிவிக்கும் போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று ‘சமன்வாயா’ எனும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்த திட்டத்தில் பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற காரணத்திற்காக விடுதி அல்லது வாடகை வீடுகளில் அனுமதி மறுக்கப்படுகிறது.
இதனால், அவர்கள் மனமுடைந்து கல்வி சேர்ந்து பயில விருப்பம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.