மூதாட்டியை பெருமைப்படுத்திய சேவாக்..!

Default Image

வயது முதிர்விலும் மின்னல் வேக டைப்பிங் செய்யும் மூதாட்டியை சேவாக் கௌரவப்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரு டைப்-ரைட்டிங் மிஷனுடன் லட்சுமி வெர்மா(72) அமர்ந்து, வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல பணி மேற்கொண்டிருந்த அவருக்கு, ஆச்சரியம் காத்திருந்தது. சமூக வலைதளங்களிலும், உள்ளூர் மீடியாவிலும் லட்சுமி வெர்மாவின் புகழ் பரவி வைரலானது.

இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டியதால், நேற்றைய பொழுது இன்ப அதிர்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதற்கு காரணம், யாரோ ஒருவர் லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது டுவிட்டரிலும் வைரலானது. இந்நிலையில் கிரிக்கெட் முன்னாள் வீரர் சேவாக்கும், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமி குறித்து தகவலை பதிவிட்டார்.

அதில், ”என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஆச்சரியப் பெண்மணி. மத்தியப் பிரதேச மாநிலம் செஹோரில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை ஆகியவற்றைத் தான். இவருக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்