முஸ்லிம் பெண் நடத்தும் கோசாலை..!
பஞ்சாப் மாநிலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறார். லூதியானா மாவட்டம் பாயல் கிராமத்தைச் சேர்ந்த சல்மா என்பவர், காயமுற்று சாலையில் கிடந்த காளை ஒன்றை வீட்டிற்கு கொண்டுவந்து பராமரித்தார்.
பசுக்கள், எருமைகள் என காயமுற்ற கால்நடைகளுக்கு அடைக்கலம் அளித்ததால், அவரது வீடே கோசாலையாக உருவெடுத்துள்ளது.
கால்நடைகளுக்கு பார்வதி, ராதா, லட்சுமி என இந்துக் கடவுள்களின் பெயர்களையே சூட்டியுள்ளார் சல்மா. கோசாலைக்கு ஆகும் மாதாந்திர செலவான 45 ஆயிரம் ரூபாயை சல்மாவின் தந்தையே வழங்கி வருகிறார். கோசாலையை தொடர்ந்து நடத்த தடை விதிக்காதவரையே மணம் முடித்து கொள்ள முடிவெடுத்துள்ளார் சல்மா!