முழு இந்துத்துவ மாநிலமாக மாறும் உத்திர பிரதேசம் : இந்து மாணவர்களுக்கு கிருஸ்துமஸ் தடை
உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்ததின் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசு கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசுவது.
இவ்வாறு இந்துத்துவ கொள்கைகளை பலமாக பரப்பி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் அலிகாரில் கிருஸ்துவ பள்ளிகள் அதிகமாக உள்ளது. விரைவில் கிருஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளதால், பள்ளிகளில் கிர்ச்துமஸ் விழாக்கள் நடத்த ஏற்பாடு நடக்கிறது. அந்த விழாக்களில் இந்து மாணவர்களை அனுமதிக்க கூடாது என இந்துத்துவ அமைப்புகள் வலியுறித்தி வருகிறன.