முல்லைப் பெரியாற்றில் புதிய அணை நிச்சயம் கட்டப்படும் – கேரள அரசு….
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியை துவக்கியுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை கேரள அரசு செய்து வருவதாகவும், அங்கு நிச்சயம் அணை கட்டப்படும் எனவும் கூறினார். புதிய அணை அமைய உள்ள இடம் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது என்பதால், வனத்துறை, புலிகள் காப்பக ஆணையம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.