இருக்கையில் மறைந்து வைக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்த 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள்,துபாயில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் கண்டெடுக்கப்பட்டன.
துபாயில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், விமான புலனாய்வுத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், இரண்டு இருக்கைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 9 கிலோ தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
உரிமம் கோரப்படாத அந்த தங்கக்கட்டிகள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இருக்கைகளில் பயணித்த பயணிகளை சந்தேகிப்பதாகவும், உள்நாட்டு பயணத்துக்கு விமானம் ஈடுபடுத்தப்படும் போது, தங்கக்கட்டிகளை எடுக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…