மும்பை மற்றும் சென்னையில் பாலியல் குற்ற வழக்குகளை ஆராய உதவும் நவீன தடயவியல் ஆய்வகம்!
மத்திய அமைச்சர் மேனகா காந்தி,சென்னை மற்றும் மும்பையில் பாலியல் குற்ற வழக்குகளை ஆராய உதவும் நவீன தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இரு ஆய்வகங்களிலும் ஆண்டுக்கு 5,000 வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தும் வசதி இருக்கும் என்றார். மேலும் நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் பலாத்கார வழக்கு குறித்து விசாரிக்க நவீன கருவி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அடுத்த மாத இறுதியில் வழங்கப்படும் இந்த கருவியின் மூலம், பலாத்கார வழக்கின் தடயங்களை அழியாமல் காக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த கருவியில் குற்றம் குறித்த அனைத்து சாட்சிகள் மற்றும் தடயங்களின் விபரங்களும் இருக்குமென்றும் மேனகா காந்தி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.