மும்பை – புனே ஹைபர்லூப் திட்டம் : ரூ.3 ஆயிரம் கோடியில் 15 கி.மீ. சோதனை பாதை ..!

Default Image
மும்பை – புனே இடையே பயண நேரத்தைக் குறைக்கும் ஹைபர்லூப் பாதை அமைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டது. இதற்காக விர்ஜீன் ஹைபர்லூப் ஒன் (Virgin Hyperloop One) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் மும்பையில் இருந்து புனேவுக்கு மணிக்கு சுமார் 700 மைல் வேகத்தில், 25 நிமிடத்தில் செல்ல முடியும்.
இந்நிலையில், 140 கி.மீ. தொலைவுக்கான இப்பாதையில் 15 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டப் பணிகளை விர்ஜீன் நிறுவனம் தொடங்க உள்ளது என்றும் இப்பணிகளின் மதிப்பு ரூ.3000 கோடி என்றும் புனே மெட்ரோ நகர மேம்பாட்டு அமைப்பின் கமிஷனர் கிரண் கிட்டே கூறியுள்ளார்.
ஹைபர் லூப் சோதனை மையத்தைப் பார்வையிட அமெரிக்கா உள்ள நெவாடா பகுதிக்கு சென்ற அவர், இந்த தகவலை கூறியுள்ளார். இந்த முதல்கட்ட பணி வகாட் பகுதியிலிருந்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் கஹன்ஜி மைதானம் வரை நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் இருந்து புனே நகருக்கு ரெயிலில் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்