மும்பையை வெள்ளம் சூழ்ந்தது !போக்குவரத்து பாதிப்பு ..!
மராட்டியத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்கள் பருவமழைக்காலம் ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 10-ந் தேதி பருவமழை தொடங்குவது வழக்கம். சில நேரங்களில் தாமதமாகவும் பருவமழை தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களாக மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட இடங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது.
இந்த நிலையில், அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் மும்பை நகரம் வெள்ளக்காடானது. மும்பையில் பல இடங்களில் மழை வெள்ளை தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.