மும்பையில் ரயில்வேயில் பணி வழங்கக் கோரி பயிற்சி பெற்ற மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால், ரயில் சேவை கடுமையாக பாதிப்பு !
பயிற்சி பெற்ற மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் மும்பையில் ரயில்வேயில் பணி வழங்கக் கோரிய போராட்டத்தால் , ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரயில்வே துறையில் பயிற்சி பெறும் மாணவர்களு,க்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு, பணி நியமனத்தில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் இதனை ரத்து செய்து முழு அளவில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மும்பையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை 7 மணிக்கு ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். மதுங்கா – தாதர் ரயில் வழித்தடம் இடையே திரண்ட அவர்கள், ரயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.4 தண்டவாளங்களையும் மறைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போராட்டத்தை அடுத்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்ற போது, மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து அவர்கள் போராடியதால், மதுங்கா – சத்ரபதி சிவாஜி ரயில் முனையம் செல்லும் வழித்தடத்தில் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையில் இருந்து தொலைதூரம் செல்லும் விரைவு ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. மூன்றரை மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். இதன் பின்னர் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டுச் சென்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.