மும்பையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு…!!
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
பெண்களிடையே உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்கத்தான் என்ற தனியார் தொண்டு நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. புனேயில் இருந்து மும்பைக்கு சுமார் 162 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்ட நிகழ்ச்சியை நடத்திய அந்த அமைப்பு, இறுதி நிகழ்ச்சியாக, மும்பையில் பிரம்மாண்ட உடற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, உடற்பயிற்சி செய்தனர்.