மும்பையில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சிசிடிவி கேமரா…!!
மும்பையில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் மகளிருக்கான பெட்டியில் சிசிடிவி கண்காணிப்பு கேமாரா பொருத்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ரயில் பெட்டிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமாரா பொருத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி முதற்கட்டமாக மும்பை புறநகர் மின்சார ரயில்களில் உள்ள மகளிருக்கான பெட்டியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது போன்ற கண்காணிப்பு கேமராவை அனைத்து ரயில்களிலும் அமைத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.