மும்பையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மும்பை மாநகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.
சாலைகளில் பல இடங்களில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதியடைந்தனர். இதையடுத்து, சாலைகளில் தேங்கிய மழைநீரை, அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.