மும்பையில் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து – 6 பேர் பலி…!!
மும்பையில் அரசு மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்தேரி பகுதியில் மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
தீ 4-ம் நிலையை எட்டியதால் அருகே இருந்த பிற தீயணைப்பு நிலையங்களிலிருந்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.