மும்பையின் இரண்டாவது முனையம் உலகின் சிறந்த விமானநிலைய முனையங்களின் பட்டியலில் 9-வது இடம் பிடித்துள்ளது. விமான முனையங்கள், பேக்கேஜ் டெலிவரி, உணவு விடுதிகள், தூய்மை பராமரிப்பு, சிறந்த கடைகள் கொண்ட விமான நிலையங்கள் என பல பிரிவுகளில் சுமார் ஒன்றரை கோடி பயணிகளிடம் ஸ்கைட்ரேக்ஸ் ((Skytrax’s)) நிறுவனம் கருத்துக் கேட்டது. பல வகைகளில் பிரித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பயணிகள் அளித்த பதிலின் அடிப்படையில் சிறந்தவையாக முதல் 10 விமான நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒட்டுமொத்தமாக சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சங்கி ((Changi)) விமான நிலையம் தொடர்ந்து 6-வது ஆண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக உயரம், 24 மணி நேர சினிமா, மொட்டை மாடி நீச்சல் குளம், பட்டாம்பூச்சி தோட்டம் என பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வதாக தென்கொரியாவின் இன்ச்சியான் ((Incheon)) சர்வதேச விமான நிலையமும், மூன்றாவதாக ஜப்பானின் ஹனெடா ((Haneda)) சர்வதேச விமான நிலையமும் தேர்வாகியுள்ளது. உலகின் சிறந்த விமான நிலைய முனையங்கள் பிரிவில் மட்டும் இந்தியாவின் மும்பை 2-வது விமான முனையம் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…