முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் முன் ஜாமீன் கோரி மனு!
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
சசிதரூரின் மூன்றாவது மனைவியான சுனந்தா புஷ்கர், ஜனவரி 17, 2014 அன்று டெல்லியில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இறந்து கிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மேக்கர் தாராவுக்கும் சசிதரூருக்கும் தொடர்பு இருந்ததாக எழுந்த பிரச்சினையால் சுனிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சசிதரூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பாக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஒரு முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.