முன்னாள் மத்திய அமைச்சர் லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹி உயிரிழப்பு ! ராகுல்காந்தி இரங்கல்..!
சுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். 92 வயதான இவர், மத்திய அரசின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரியாக இருந்தவர்.
இவரது இறப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான லலிதேஷ்வர் பிரசாத் ஷாஹியின் இறப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை மரணமடைந்த கோவாவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சந்தாராம் நாயக்கின் மரணத்துக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.