முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். அவரை கவுரவப்படுத்தும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயங்களை அச்சடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 100 ரூபாய் நாணயம், 35 கிராம் எடையுடன், ஸ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயம், 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல், ஐந்து சதவீதம் துத்தநாகம் கலந்து உருவாக்கப்பட உள்ளது.