முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் விழாவில் பங்கேற்க அழைப்பு!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஜூன் ஏழாம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஜூன் ஏழாம் நாள் அறுநூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் சங்க சிக்சா வர்க்கா என்கிற கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் சின்கா தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்சின் கொள்கை, இந்துத்துவம் பற்றிய கலந்துரையாடலிலும் பிரணாப் பங்கேற்க உள்ளதாகவும் ராகேஷ் சின்கா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.