முன்கூட்டியே தேர்தல்…!கலைகிறது சட்டப்பேரவை…!அதிரடி முடிவெடுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்…!
தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம்உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது.
தற்போது தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிலையில் தெலங்கானா சட்டசபையை கலைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை அம்மாநில ஆளுநர் நரசிம்மனிடம் அளித்தார் முதல்வர் சந்திரசேகர ராவ்.