முந்தைய அரசுகள் உட்கட்டமைப்பு வளர்ச்சிகளில் கவனம் செலுத்தவில்லை – பிரதமர் மோடி…!!
முந்தைய அரசு உட்கட்டமைப்பு வளர்ச்சிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தனது அரசின் நோக்கம், சமூகத்தில் கடைநிலை மனிதனுக்கும் சென்றடையும் வகையிலான, சமநிலையிலான வளர்ச்சியை அடைய போராடுவதே என்றார். முந்தைய அரசுகள் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் அதனை செய்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
வாஜ்பாய் தலைமையிலான அரசில், மெட்ரோ ரெயில் திட்டம் ஊக்கம் பெற்றது என்று கூறிய பிரதமர் மோடி, அரசு சில காலம் அதிகாரத்தில் நீடித்து இருந்தால், இந்த விரைவு போக்குவரத்து திட்டம் நாட்டின் நகரங்களில் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கும் என்றார்.