முதல்வர் மீது கல்வீச்சு..!கல்வீச்சில் இருந்து தப்பினார்..! ம.பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான்..!!
மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் மீது கல்வீசப்பட்டுள்ளது.
சிதி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானின் வாகனம் மீது விஷமிகள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணமாக சுர்ஹாத் தொகுதியில் பிரச்சாரத்தில் சவுஹான் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் ஈடுபட்ட இந்த தொகுதி, எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் அவரின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஷிவ்ராஜ் சிங் சவுஹான் இந்த நிகழ்வு குறித்து பேசினார் ”அஜய் சிங், உங்களுக்கு தைரியம் இருந்தால் திறந்தவெளியில் வந்து சண்டையிடுங்கள். நான் உடல்ரீதியாக வலிமை குறைந்தவன்தான். ஆனால் உங்களிடம் தோற்றுவிட மாட்டேன். மாநில மக்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங், ”நாங்கள் யாரும் கல்வீச்சில் ஈடுபடவில்லை. குறிப்பாக என் பேரையும் சுர்ஹாத் பகுதி மக்களின் பேரையும் கெடுப்பதற்காக யாரோ திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.தேர்தலுக்கான அங்கு போட்டி தொடங்கிவிட்டது.
DINASUVADU