உங்களுடைய கல்வி…பிறப்பு…சான்றிதழ்கள் எங்கே..? குப்பை அரசாங்கம்-கொட்டித் தீர்க்கும் பிரபல நடிகர்

Default Image
  • மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழை வெளியிட வேண்டும். 
  • இது ஒரு குப்பை அரசாங்கம் என்று பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் கடும் சாடல்.

நாடு முழுவதும் நேற்று குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப்  குடியுரிமைச்சட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:

Image result for anurag kashyap

மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும். அதன் பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழையும் அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழையும் வெளியிட வேண்டும்.இதன் பின்பு தான்  குடிமக்களிடம் ஆவணங்களைக் கேட்கவேண்டும். அரசால் ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை.இந்த அரசிற்கு ஒரு திட்டமும் இல்லை. மேலும் அவர்களால் ஒரு திட்டத்தை கூடக் கொண்டுவர முடியாது. இது குப்பை அரசு  குடியுரிமைத்திருத்தச் சட்டம் என்பது பண மதிப்பு நீக்கம் போன்றதே தவிர இது பற்றி அவர்களுக்கு ஒரு பார்வையும் கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.

பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் நடிகை நயந்தாராவின் இமைக்க நோடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

ஆரம்பம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கடுமையாக எதிர்த்து வந்த இவர்  அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்