Categories: இந்தியா

முதலமைச்சர் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் : சுப்பிரமணியன் சுவாமி..!

Published by
Dinasuvadu desk

டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் அமைச்சர்களை சந்திப்பதில்லை என்றும், அரசு கொண்டுவரும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிப்பதற்காக நேற்று மாலை சென்ற முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையில், அவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகும் துணை நிலை ஆளுநர் வராததை அடுத்து, முதலமைச்சர் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மனீஷ் சிசோடியா உள்ளிட்டோர் துணை நிலை ஆளுநர் வீட்டின் வரவேற்பறையிலேயே படுத்து உறங்கினர்.

நாங்கள் பொதுமக்களுக்காக போராடுகிறோம், டெல்லி மக்களுக்கான பொது சேவையை தடை செய்தவர்களுக்கு எதிராக போராடுகிறோம் என  கெஜ்ரிவால் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், வீட்டுக்கே சென்று ரே‌ஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரிகள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11–ந் தேதி மாலையில் துணைநிலை கவர்னரை சந்திக்க சென்றார்.
ஆனால் இந்த குழுவினரை துணைநிலை கவர்னர் அனில் பைஜால் சந்திக்கவில்லை. இதனால் துணைநிலை கவர்னர் மாளிகையின் வரவேற்பறையிலேயே 11–ந் தேதி மாலை 5.30 மணியில் இருந்து கெஜ்ரிவால் மற்றும் குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் மாளிகையிலேயே மந்திரி சத்யேந்தர் ஜெயின் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக முதல் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியாவும் அங்கேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு, மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கருவியாக பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி மேற்கொண்டனர்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம். பள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம். வாக்களித்த டெல்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என கூறியுள்ளார்.சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டில் இருந்து புத்தகங்கள், இன்சுலின் ஊசிகள், மருந்து மாத்திரைகள், உணவு, மாற்று உடைகள் போன்றவை கொடுத்து அனுப்பப்படுகின்றன.

எதற்காக இந்த தர்ணா போராட்டம்? ஆளுநர் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுப்பதில்லை என்று கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். என்ன கோரிக்கைகள்?

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தை கைவிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பணிக்கும் அமைச்சர்கள் கூட்டத்திற்கும் வராத அதிகாரிகள் மீது அத்தியாவசிய சேவைகள் சட்டமான எஸ்மாவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ரேசன் கார்டுகளை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் போன்றவை முக்கியக் கோரிக்கைகளாகும்.

நான்கு மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்களின் கூட்டங்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் ஆம் ஆத்மி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது.ஆளுநரும் மத்திய அரசும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தூண்டி விடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் டெல்லி அரசுக்கு ஒத்துழைப்பதில்லை என்றும் அக்கட்சி குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க மாநில அரசு முடங்கிக் கிடக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள கெஜ்ரிவால், இப்பிரச்சினையில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்

Recent Posts

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

1 hour ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

1 hour ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

1 hour ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

4 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

4 hours ago