Categories: இந்தியா

முதலமைச்சர்,துணை முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்து..!ஈ.பி.எஸ்,ஓ.பி.எஸ் மனு தள்ளுபடி..!பதிலளிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!அதிமுக முன்னாள் எம்.பி. வழக்கு…!

Published by
Venu

கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Image result for அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்ய வேண்டும்.

இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம்,அனைத்து தரப்பினரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.அதில்  முதல்வர், துணை முதல்வர் மட்டும் அல்லாமல் சசிகலாவும் பதில் 3 வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்ட 4 வாரத்திற்குள் கே.சி.பழனிசாமி மனு மீது முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் கே.சி.பழனிசாமியின் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து முதல்வர், துணை முதல்வர் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

6 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

6 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

8 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

8 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

9 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

10 hours ago