முடி காணிக்கை மூலம் திருப்பதி கோயிலில் 133.32 கோடி ரூபாய் வருவாய்!
ஒரே ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் முடி காணிக்கை மூலம் 133 கோடியே 32 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கோயில் தலைமை அர்ச்சகராக உள்ள வேணுகோபால்தீட்சிதலு நேற்று நடைபெற்ற அறங்காவலர் கூட்டத்தில் ஆகம ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ், திருமலையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் அறைகளைக் கட்ட 5 கோடியே 20 லட்சம் ரூபாயும், மாஸ்டர் பிளான் திட்டத்தின்கீழ் கழிவறைகள் அமைக்க 16 கோடி ரூபாயும் ஒதுக்கப்ப்டடிருப்பதாக தெரிவித்தார்.