முடங்குகிறது கேரளா…….வெடிக்கும் சபரிமலை சர்ச்சை…….. நாளை முழு அடைப்பு….!!!
கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி பல வருடமாக வழக்கு நடந்து வந்தது. மிக நீண்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அதில் சபரிமலையில்,அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
அவர் கருதியது போலவே இந்த சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கான இந்த தீர்ப்பை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கேரளாவே போராட்டத்தில் குதித்து ட்வீட்டரில் சேவ்சபரிமாலா என்ற ஹெஷ்டெக் வலம்வந்தது குறிப்பிடத்தக்கது.கோவிலுக்கு வருவோரை தடுத்தி நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்,தீர்ப்பை நடைமுறை படுத்தும் என்று நிற்கும் கேரளா அரசு என்று கேரளாவில் பதற்றத்தின் உச்சநிலையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் பெண்களுக்கு சாதகமாக அளித்த இந்த தீர்ப்பை பெண்களே எதிர்த்து போராடுவதும்,குரல் கொடுப்பதுமாக சபரிமலை சர்ச்சை நீண்டு செல்கிறது.இந்த பதற்றமான சூழல் அங்கு நாளை முழு போராட்டம் நடைபெறும் என்று சபரிமலா கர்மசமிதி அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU