சட்டசபைக்கு முகமூடி மற்றும் கையுறையுடன் வந்த குட்டியாடி தொகுதி எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் நிபா வைரஸின் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோய்தொற்று பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் மூகமூடி மற்றும் கையுறைடன் வெளியில் செல்கிறார்கள். சுற்றுலாவுக்கு வெளியூர் பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும் கேரள சுற்றுலா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுளது.
இந்நிலையில் இன்று சட்டசபை கேள்வி நேரத்தின்போது குட்டியாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா, முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து வந்தார்.
இது மாநிலத்தின் தலையாய பெரிய பிரச்சினையை கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதையடுத்து அவர் கையுறை அணிந்து வரும் அளவுக்கு சட்டசபையில் அமர்ந்துள்ள உறுப்பினருக்கு யாராவது நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பரக்கல் அப்துல்லாவிற்கே நிபா நோய்த்தொற்று இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர் சட்டசபைக்கு வந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, அரசின் கவனத்தை ஈர்க்கவே முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா, முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து வந்ததாக தெரிவித்தார்
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…