"Me Too"சிக்கிய BJP அமைச்சர் ஏழு பெண்கள் புகார்…!!
பத்திரிகை துறையில் வேலை செய்துவரும் ஏழு பெண்களின் கடுமையான பாலியல் வன்குற்ற புகாருக்கு உள்ளாகியிருக்கும் வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என குரல் வலுத்துள்ளது. ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளி யுறவுத்துறை இணை அமைச்சராக்கினார்.
இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் – குறிப்பாக அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் மீது – இன்னும் குறிப்பாக பாஜக பிரமுகர்கள், தலைவர்கள் அமைச்சர்கள் உள்பட பலர் மீது சரமாரியாக எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், “நானும்தான்” (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய ஆறு பெண்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த ஏழு பேரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், மிகக்கடுமையானதாக உள்ளன. சம்பந்தப்பட்ட பெண்களின் கவுரவமான வாழ்க்கைக்கும் பணிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் மிகக்கடுமையான முறையில் பாலியல் வன்குற்றங்களை அக்பர் செய்துள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
DINASUVADU