மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்!தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு!
வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர்.
மேலும் தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் தூத்துக்குடி ஆட்சியர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர் .ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.விரைவில் இந்த விசாரணைக்கு வர உள்ளது.