மீண்டும் விண்ணை முட்ட போகும் பெட்ரோல்..டீசல் விலை..!!தேர்தல் நேரத்தில் சிக்கலில் சிக்கும் பிஜேபி…!!
கச்சா எண்ணெய் விலையானது சர்வதேசச் சந்தைகளில் குறைந்து காணப்பட்டதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில வாரங்களில் 10 சதவீதம் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எண்ணெய் வளம் மிகுந்து காணப்படும் நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்போது குறைத்தால் இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த விலை உயர்வானது மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தன் தேவையின் மொத்த இறக்குமதியில்
கச்சா எண்ணெயை 80% விதமும், இயற்கை எரிவாயுவை 75% விதமும் , எல்பிஜி சப்ளையை 97 % விதம் ஓபெக் எனப்படுகின்ற எண்ணெய் ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில் எண்ணெய் வள நாடுகள் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 12 லட்சம் பேரல்கள் அளவு கொண்ட கச்சா எண்ணெயை நாடுகளுக்கு வழங்கி வருகிறது.இந்த உற்பத்தியை குறைக்க
எண்ணெய் வள நாடுகள் முடிவுசெய்துள்ளது.ஆனால் இது தொடர்பான இந்த முடிவை மீண்டும் ஏப்ரலில் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து காணப்படும் நிலையில் எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக குறைத்து விட்டால் சர்வதேசச் சந்தையில் பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் விண்ணை முட்டும் என்று தெரிகிறது.இதனிடேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கும் இந்த நேரத்தில் பிற மாநில தேர்தலை எதிர்கொள்ளும் மத்திட அரசுக்கு இந்த விலை உயர்வு தலைவலி ஏற்படுத்தும் என்று தெரிகிறது.இதனால் அரசுக்கு இந்த விலை உயர்வு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.