“மின்னணு வாக்குப் பெட்டிகள் இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி உத்திரபிரதேசத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெறமுடியாது. “ – பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியது.
ஏற்கெனெவே நாடு முழுக்க பல சமூக ஆர்வலர்களும், சில கணினி வல்லுனர்களும், இடதுசாரிகளும், டெல்லியில் கேஜ்ரிவாலும் கூறிய புகார் தான். இப்போது இவர் கூறுகிறார். ஆனால், தொடர்ந்து இந்த மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான விளைவை சாதித்துக் கொண்டு ஆளும் கட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை ஏமாற்றும் மக்கள் விரோத சதிச் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இயந்திரத்தை உருவாக்கி, அது இயங்குவதற்கான கட்டளைகளையும் உருவாக்கும் மனிதனுக்கு அதை தான் விரும்பும் விதத்தில் இயங்குமாறு ஒரு சிறிய அம்சத்தையும் சேர்த்து கட்டளைகளை உருவாக்க முடியாதா ? முன்னேறிய பல மேற்கத்திய நாடுகளில் கூட மின்னணு இயந்திரத்திற்குப் பதில் பழைய வாக்குச் சீட்டு முறை பயன்பாட்டில் உள்ளது இந்த காரணத்தினால் தான்.
அடுத்த சட்டசபை அல்லது மக்களவைத் தேர்தலுக்குள் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்பதன் அவசியம் இப்போதுதான் மக்களுக்கு புரிகிறது.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…