Categories: இந்தியா

மிகவும் பரிதாபகரமான நிலையில் எடியூரப்பா முதல்வர் பதவி?என்னவாகும் எடியூரப்பாவின் கதி ?

Published by
Venu

இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில்,கர்நாடக முதல்வராக எடியூரப்பா அடுத்து 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்க அவருக்கு மேஜிக் நம்பரான 111 எம்எல்ஏக்கள் ஆதரவை  நிரூபித்தாக வேண்டும்.

Image result for karnataka cmrace

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 36 இடங்களும் கிடைத்தன. இதில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம், மற்றவை 2 இடங்களைக் கைப்பற்றின. இதில் குமாரசாமி சென்னபட்னா, ராமநகரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால், ஒரு தொகுதி கணக்கில் எடுக்கப்படாது. இதனால், 221 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 104 எம்எல்ஏக்கள் வைத்துள்ள எடியூரப்பாவுக்கு தனது பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். அதேசமயம், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி (78+36+1+2=117) 117 இடங்கள் வைத்துள்ளன.

இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா 111 எம்எல்ஏக்கள் தேவை அல்லது 3 சாதகமான வழிகள் மட்டுமே இருக்கின்றன.

1. முதலாவதாக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா களம் கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

2. அது தோல்வி அடையும்பட்சத்தில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் 14 பேரை பதவி ஏற்கவிடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு பதவி ஏற்காமல் இருந்தால், அவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 207 ஆகக் குறைந்துவிடும். பாஜகவுக்கு 104 உறுப்பினர்கள் இருப்பதால், பாதிக்கு மேல் எம்எல்ஏக்கள் இருப்பதால், பாஜக அரசு பிழைத்துவிடும்.

3. மூன்றாவது வழியாக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் வாக்களிக்கவிடாமல் தடுப்பது, அல்லது நடுநிலை வகிக்கச் செய்வது இதன் மூலம் அவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 207ஆகக்குறையும். அப்போது எடியூரப்பா தனது ஆட்சியைத் தக்கவைக்க முடியும்.

ஒரு வேளை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் கட்சியின் கொறடா உத்தரவை மாறி பாஜகவுக்கு வாக்களிக்கலாம். அவ்வாறு செய்தால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவி இழப்பார்கள், 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கும்.

ஆதலால் எடியூரப்பா தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த 3 வாய்ப்புகளில் எந்த முறைகளில் ஏதாவது ஒருமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

ஏற்கனவே காங்கிரஸ் எம்எல்ஏகள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா ஆகிய இருவரும் இன்னும் சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பதால், தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

8 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

8 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

10 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

11 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

11 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

12 hours ago