மிகப்பெரிய செல்போன் உற்பத்தி மையமாக இந்தியா மாறுகிறது!மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,இந்தியா மிகப்பெரிய செல்போன் உற்பத்தி மையமாக மாறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்போது, இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாக கூறினார். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 120 செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் இந்தியாவில் உருவாகியிருப்பதாக கூறிய ரவிசங்கர் பிரசாத், பாஜகவின் 4ஆண்டு ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் இந்தியா பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறிய ரவிசங்கர் பிரசாத் , வாக்களித்த மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.