தேர்தல் சம்பந்தமான செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் ஊழியர்கள் சத்தீஸ்கர் சென்றிருந்தனர்.
சத்தீஸ்கர் பகுதியில் நகசல் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு கேமரா மேன் உயிரிழந்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியின் அரண்பூர் காட்டில் தான் நடந்துள்ளது. “எங்கள் குழுவினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அங்கு சென்றிருந்தது. அவர்களுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும் இருந்தனர்” என்று டி.ஐ.ஜி சுந்தர் ராஜ் தெரிவித் துள்ளார்.உயிரிழந்தது அச்சுதானந்த் என்று தூர்தர்ஷன் கேமரா மேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூரில் சி.ஆர்.பி.எப்-யைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரண்டு சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.சத்தீஸ்கரின் 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதி தேர்தலின் முதல் கட்டத்தில் நடைபெறுகிறது.
நேற்று சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ” கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல் 150-இல் இருந்து 78-80-ஆக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…