மார்ச் 2019-க்குள் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் : மின்சார மந்திரி ஆர்கே.சிங்
மக்களவையில் கேள்விநேரத்தின் போது மின்சாரம் குறித்து கேட்கப்பட்டது, அப்போது அதற்க்கு பதிலளித்த மின்சார மந்திரி ஆர்கே சிங் கூறும்போது, ‘இன்னும் மின்சார விநியோகம் கிடைக்கப்பெறாமல் உள்ள 1694 இல்லங்களுக்கு டிசம்பர் 2018-க்குள் மின் விநியோகம் வழங்கப்படும். இந்த வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வரும் மார்ச் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்படும்.
மார்ச் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தடையில்லா மின்சாரம் வழங்க தவறும் பட்சத்தில், மின்விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். நாட்டில் உள்ள மின்சார உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது’ இவ்வாறு மின்சார தேவை குறித்து ஆர்கே சிங் மக்களவையில் கூறினார்.
source : dinasuvadu.com