மாநிலங்களவை துணைதலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் ஒரு இடம் காலியாக இருந்தது.கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இ மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.அதேபோல் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது.இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ், காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியாக பாஜக கூட்டணி வேட்பாளர் ஷரிவன்ஷ் நாராயணன் 125 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.எதிர்க் கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.மேலும் அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1ஆம் தேதியுடன் மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…