மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்:பாஜக வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் வெற்றி …!அதிமுகவின் 13 எம்.பிக்களும் பாஜகவிற்கு ஆதரவு …!

Default Image

மாநிலங்களவை துணைதலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் ஒரு இடம் காலியாக இருந்தது.கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி இ மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் இன்று  நடைபெறும் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.அதேபோல் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது.இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
Related image
இதில்  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ், காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத் இடையே கடும்  போட்டி நிலவியது.
Image result for HarivanshNarayanSingh
இறுதியாக பாஜக கூட்டணி வேட்பாளர் ஷரிவன்ஷ் நாராயணன்  125 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.எதிர்க் கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.மேலும் அதிமுக எம்.பிக்கள் 13 பேரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1ஆம் தேதியுடன் மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன் ஜோசப்பின் பதவிக்காலம் நிறைவுபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்