மாணவிகள் இந்த நிறத்தில் மட்டும் தான் உள்ளாடைகளை அணிய வேண்டும்!பள்ளியின் விதிமுறையால் மாணவிகள் அவதி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஓன்று பள்ளி மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகின்றது.இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.வரும் கல்வி ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை பள்ளி நிர்வாகத்தால் அறிவிக்கபட்டது.அதில் குறிப்பாக பள்ளிக்கு வரும்போது மாணவிகள் பழுப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட உள்ளாடைகளை மட்டும் தான் அணிய வேண்டும் என்ற வினோத அறிவிப்பை அறிவித்தது.
இதனால் பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்தனர்.பள்ளி நுழைவாயில் முன் போராட்டத்திலும் ஈடுபட்டடனர்.இதுமட்டும் அல்லாமல் மாணவிகள் கழிவறைக்கு சென்று வரவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.இதற்கு விளக்கம் அளித்த பள்ளி நிர்வாகம் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.