“மாணவிகளின் துப்பட்டாக்களை கழற்றிய காவல்துறை” முதல்வர் உத்தரவாம்…!!
மத்திய பிரதேசம் ,
மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சவுகான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் அணிந்திருந்த சீருடையில் கறுப்பு துப்பட்டாவை காவல்துறையை கலத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வடக்கு போபாலில் இருந்து 220 கி.மீ.தொலைவில் உள்ள முல்டாய் நகரம். இங்கு நேற்று மாலை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அந்த நிகழ்சியில் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி சித்திரகூட் கிராமோதயா விஷ்வவித்யாலயா கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
அங்கே வந்த மாணவிகள் அணிந்திருந்த கறுப்பு வண்ண துப்பட்டாக்களைக் கண்டதும் போலீஸார் கடும் கோபம் அடைந்து மாணவிகள் துப்பட்டாக்களை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.அவரவர்கள் கையில் வைத்துள்ள பையில் எடுத்துவைத்துக்கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டன.
போலீஸாரின் இந்த தீடீர் உத்தரவு மாணவிகளுக்கு அதிருப்தியை உண்டாக்கியது.மாணவிகளை கட்டாயப்படுத்தி காவல்துறை அனைவரிடமிருந்தும் கறுப்புத் துப்பட்டாக்களை வாங்கிச் சென்றுவிட்டனர். துப்பட்டா இன்றி மாணவிகள் நிகழ்ச்சி முடியும்வரை மிகவும் அவமான உணர்வோடு இருந்ததாக மாணவிகளே கூறினர்.
அதிலும் குறிப்பாக கருப்புநிறம் துப்பட்டாக்களை உள்ளடக்கிய கல்லூரி ஆடையை தான் நங்கள் அணிந்து வந்தோம் என்று மாணவிகள் கூறியும் காவல்துறை மாணவிகளின் துப்பட்டாக்களை கட்டாயப்படுத்தி கழற்ற வைத்துள்ளனர்.இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சியினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
DINASUVADU