மாணவர் பரிமாற்றத்தை அதிகரிக்க முடிவு : சுஷ்மா..!
இந்தியா – பிரான்ஸ் நாடுகளிடையே மாணவர் பரிமாற்ற திட்டத்தை வலிமைப்படுத்த, இருநாடுகளும் இணைந்து பணியாற்ற உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரான்ஸ் சென்றடைந்தார். தலைநகர் பாரீசில் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்திய அவர், இந்திய மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 2020ஆம் ஆண்டில் இந்தியாவும் பிரான்சும் பரிமாறிக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்துவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்கள் தொடர்பாகவும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக கூறிய அவர், பிரான்ஸ் நாட்டு கல்வி நிறுவனங்களுடன், இந்தியாவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.